திருச்செங்கோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 3 வார்டுக்கு ஒரு கட்டம் என 11 கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடத்த திட்டமிடப்பட்டு இதுவரை ஆறு முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது இந்த நிலையில் இன்று 6 11 மற்றும் 16 வது வார்டுகளுக்கான ஏழாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மலையடிவாரம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது முகாமை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார் 13 தமிழக அரசு துறைகளைச் சேர்ந்த 45 சேவைகளுக்கான மனுக்கள் தரப்பட்டது மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மனு கொடுக்க பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் முகாமில் நகராட்சி துறை சார்பில் பெறப்பட்ட வீட்டு வரி பெயர் மாற்றம் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டது உத்தரவுகளை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்ஆகியோர் வழங்கினர் நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆறாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மனோன்மணி சரவணன் முருகன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேஸ்வரன்ஆகியோர் உள்ளிட்டநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள்,என பலரும் கலந்து கொண்டனர் முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது தேவைக்கான மனுக்களை கொடுத்துள்ளனர் இந்த மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் ஊறிய தீர்வு காணப்படும் என பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
Next Story

