கிருஷ்ணகிரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கே.பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி (34) கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது செல்வி இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்தார். அவரை அங்ருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே செல்வி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

