கிருஷ்ணராயபுரம்-மதுவுக்கு அடிமை- வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

கிருஷ்ணராயபுரம்-மதுவுக்கு அடிமை- வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.
கிருஷ்ணராயபுரம்-மதுவுக்கு அடிமை- வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 29. இவரது மனைவி மாலதி வயது 25. கடந்த 4- வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 2- குழந்தைகள் உள்ளனர். தினேஷ் குமார் அண்மைக்காலமாக மதுவுக்கு அடிமையானார். இதனால் ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் புதன்கிழமை மதியம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து மாலதி அளித்த புகாரில் மாயனூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story