காவேரிப்பட்டிணம்: குடிபோதையில் வந்த வினை நின்று போன திருமணம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்துள்ள காந்திகுப்பம் அருயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கும் காவேரிபட்டிணம் அருகே உள்ள கனகபுதூர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய தீர்மாணிக்கபட்டு காவேரிபட்டிணத்தில் 26ஆம் தேதி அந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடந்தது. அப்போது மணமகள் நண்பர்கள் சிலர் மதுபோதையில் மேடையில் ஏறி மாப்பிள்ளை, மற்றும் மணப்பெண்ணையும் நடனமாடச் சொன்னதாக கூறப்படுகிறது. மணப்பெண் நடனமாட மறுத்துள்ளார். இதை பெண்ணின் உறவினர்களும் இடையே தகராறு வந்து பெண் வீட்டாரை, மணமகனுடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இப்படி செய்கிறார்களே, திருமணமானால் என்னென்ன செய்வார்கள் என கருதிய அந்த பெண், அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்தார்.எனக்கு திருமணமும் வேண்டாம், இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் என கூறி மணப்பெண் எழுந்து சென்றதால் திருமணம் நின்று போனது. இதான்ர் அந்தபகுதியே பாரபரப்பாக காணப்பட்டது. .
Next Story

