புதுகையில் கடந்த சில மாதங்களாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு!

அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவீத திருட்டு குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன புதுக்கோட்டையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற வழக்கில் ஒருவர் கைது அவரிடம் இருந்து புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட அன்னச்சத்திரம் ஜே.என் நகரை சேர்ந்த கார்த்திகா என்பவரது என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் புதுக்கோட்டை நகர காவல் துறையினர் 75 சவரன் நகை திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கார்த்திகா வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட 57.5 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கைதாகி உள்ள வெற்றிவேல் மீது கடந்த 2017ம் ஆண்டு வரை 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் 2017 க்கு பிறகு எந்த ஒரு திருட்டு வழக்கிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்த நிலையில் தற்போது இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் யாரையும் அவர் கூட்டு சேர்க்காமல் தனி ஆளாக பூட்டிருக்கும் வீட்டை நோட்டமிட்டு இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கைதாகி உள்ள வெற்றிவேல் தெரிவித்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தெரிவித்தார்.
Next Story