காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை

காமன்வெல்த் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை
X
குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று அசத்திய கோவில்பட்டி வீரர்கள்
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் ஆகமதாபாத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிநபர் (ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க்) மொத்த லிஃப்ட் போட்டிகள் அடங்கும் இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை மகாராஜன் என்பவர் (வயது 17) 60 kg எடை பிரிவில் 254 கிலோ தூக்கி இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவில் இந்தியாவிற்க்கு 2 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார் தங்கப்பதக்கம் வென்றுள்ள மகராஜன் இந்திய ராணுவ விளையாட்டு இன்ஸ்டியூட் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை ஐந்து இன்டர்நேஷனல் பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆகமதாபாத்தில் காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். மகாராஜன் வெற்றியைக் கண்டு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகாராஜன் தந்தை ஆறுமுக பாண்டியன் - தாயார் முருக லட்சுமி. ஆறுமுக பாண்டியன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பளுதூக்குதலில் ஆர்வம் கொண்டு உள்ளூரில் பயிற்சி பெற்ற மகாராஜன், இதுவரை 5 இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்றிருப்பதாகவும், தற்போது இந்திய இராணுவ இன்ஸ்டிடியூட் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வருவதாகவும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் மகாராஜாவின் ஆசை என்றும், தமிழக அரசு அவரது பயிற்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதே ஊரைச் சேர்ந்த சென்னையில் ரயில்வேயில் பணியாற்றி வரும் ராஜா என்பவரும் ஆகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ சீனியர் பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாட்ச் 128 மற்றும் கிளீன் & ஜெர்க் 168 எடை தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் நார்வேயில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் ராஜாவின் தந்தை முத்துப்பாண்டி லோடுமேனாக பணியாற்றி வருகிறார், அவரது தாயார் பேச்சியம்மாள் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவரது மூத்த சகோதரர் சுரேஷ் இவரும் ஒரு பளு தூக்கும் வீரர்.. வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பளு தூக்கும் வீரர் இதுவரை 18 சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று உள்ளது மட்டுமின்றி, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை செய்துள்ளது கோவில்பட்டி மக்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது
Next Story