ஓசூரில் தாயை ஏமாற்றி கடத்தப்பட்ட குழந்தை ஓசூரில் மீட்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள மோட்டூர் பகுதியில் இருந்து 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது. ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறி பரிகாரம் செய்ய வேண்டுமென்று பச்சிளம் குழந்தையை கடத்திய விஜயசாந்தி என்பவரை ஓசூரில் போலீசார் கைது செய்தனர்.பின்னர் கிருஷ்ணகிரி துணை கண்காணிப்பாளர் முரளி அந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்தார். தனக்கு பிறந்த குழந்தை இறந்ததால் கடத்தியதாக விஜயசாந்தி போலீசில் தெரிவித்தார்.
Next Story

