பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம்,
NAMAKKAL KING 24X7 B |30 Aug 2025 6:58 PM ISTநாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், திருச்செங்கோடு, பரமத்தி, கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், , மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், இ.ஆ.ப., திருச்செங்கோடு நகராட்சி வார்டு எண்.11-ல் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியினையும், ஏ.இறையமங்கலம் ஊராட்சி நைனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.35.25 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நைனாம்பாளையத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டாரம், பள்ளிக்காடு பாலாஜி நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13000 எண்ணிக்கையில் ரூ.9.19 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் நடவு செய்யப்பட்டு வருவதையும், எஸ்.இறையமங்கலம் பகுதியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.1.30 இலட்சம் மானியத்தில் செ.கருப்பண்ணன் என்பவர் நிழல்வலை அமைத்து கரும்பு நாற்று உற்பத்தி செய்து வருவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15வது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பொது சுகாதார அலகு கட்டிடத்தின் கட்டுமானப் பணியினையும், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வீரணாம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.36 இலட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் நடவு செய்யப்பட்டு வருவதையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர்களுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 32 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், கபிலக்குறிச்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.71.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், கபிலர்குறிச்சி ஊராட்சி கபிலர்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார அலகு கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அதேபகுதியில் ஸ்ரீசக்தி மகளிர் குழுவினர் மகளிர் திட்டம் மூலம் ரூ.10.00 மானியத்தில் kitchen towel, Apron ஆகியவற்றை உற்பத்தி செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தும்மங்குறிச்சி ஊராட்சி, மேல்முகம் மேலப்பட்டியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மானியத்தில் நடேசன் என்பவர் நிரந்தர பந்தல் அமைத்து புடலை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்து வருவதை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் திருமதி மு.ஆசியா மரியம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளியுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளின்போது, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) மா.புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் உட்பட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாமக்கல் மாவட்டம்.
Next Story



