ஜெயங்கொண்டத்தில் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
X
ஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதிகளை லேசான முதல் பணமாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம், ஆக.31- ஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலைக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது இதனால் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் லேசாக தொடங்கிய மழை மிதமானது முதல் கனமழையாக பெய்தது இவனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் தற்போது விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொண்டு வருவதால் இம்மழை விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மிதமானது முதல் கனமழை பெய்ததால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்
Next Story