தாராபுரம் வக்கீல் கொலை வழக்கில் மூன்று பேர் மீது குண்டூர் சட்டம்

X
தாராபுரத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் முருகானந்தம் (வயது 32). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட் டார். இந்த கொலை தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகானந்தத்தின் சித்தப்பா தண்டபாணி, அதே ஊரை சேர்ந்த நாட்டுதுரை, தட்சிணாமூர்த்தி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தண்டபாணி, நாட்டுத்துரை, தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையொட்டி இவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை கோவை சிறையில் இருக்கும் அவர்களிடம் போலீசார் வழங்கினர்.
Next Story

