மாணவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி!

மாணவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி பயிற்சி!
X
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விபத்தின் போது முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் இன்று நடந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விபத்தின் போது முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் இன்று (ஆகஸ்ட்-30) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story