குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

X
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, நேற்று இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நேற்று 2ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பேரருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
Next Story

