சிவகிரியில் மது போதையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். அவரது கணவா் மாரியப்பன். கடந்த 9 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களது மகன் முருகன் என்ற குமாா் (19), அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட முருகன் அவ்வப்போது மனக்குழப்பத்தில் ஏதாவது செய்வது வழக்கமாம். அதுபோல் அதிகாலை மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து முருகனின் தாய் பாண்டியம்மாள் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

