சமூக வலைத்தளங்களில் கெத்து காட்டிய ரவுடி கைது!

X
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா பல்வேறு கொலை வழக்குகள் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கொண்டாட்டத்தினை வீடியோவாக எடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் எதிரிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையிலும் யாரா வேணாலும் இரு நம்ம லைனில் கரெக்டா இரு, திரையரங்கம் சிதறட்டும் இவன் பெயர் முழுக்க களைக்கட்டும் சிறுசுங்க எல்லாம் கதறட்டும் விசில் பறக்கட்டும் நரகத்துக்கே தெரியட்டும் அந்த எமனுக்குமே புரியட்டும் உலகத்துக்கே கேட்கட்டும் என்ன நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்பட பாடலின் பின்னணியில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி உள்ளது இதைத்தொடர்ந்து நகர உதவி கண்காணிப்பாளர் மதன் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார் இதை அடுத்து முத்தையாபுரம் காவல்துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜா மற்றும் அவரிடம் சேர்ந்த நபர்களை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர் இதில் ராஜா வேறொரு குற்ற சம்பவத்தில் ஈடுபட இருப்பது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜா முத்தையாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர் இந்நிலையில் இந்த வீடியோ வெளியிட்டது தொடர்பாக ராஜா மற்றும் அவரிடம் சேர்ந்த இரண்டு பேரை காவல் நிலையம் வரவழைத்த முத்தையாபுரம் போலீசார் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற திருக்குறளை வாசிக்க சொல்லி அதன் பொருளை கூறச் சொல்லி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் தூத்துக்குடியில் யாரா வேணாலும் இரு நம்ம லைனில் கரெக்டா இரு என்று வீடியோ வெளியிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை கரெக்ட் செய்து காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் இதுபோன்று வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story

