கபடி போட்டி அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

X
தூத்துக்குடியில் மாநில அளவிலான கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கான மின்னொளி கபடி போட்டி அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இதில் 12 கல்லூரிகளை சார்ந்த அணிகள் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான மின்னொளி கபடி போட்டி தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் திடலில் துவங்கியது. நேற்று துவங்கிய இரண்டு நாள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், கரூர், திருச்சி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 12 கல்லூரிகளை சார்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன. முதலில் நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியினரும் அவர்களை எதிர்த்து கரூர் சேரன் கல்லூரி அணிகள் மோதின. இப்போட்டிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கரூர் சேரன் கல்லூரி அணி 34க்கு 23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
Next Story

