குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

X
மத்திய பா ஜ அரசு முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றசாட்டை முன்வைத்தும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கேட்டும் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுக்கடை தபால் நிலையத்தில் இந்திய குடியரசு தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜேஷ்குமார் எம் எல் ஏ துவக்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

