போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை

X
குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாவட்டத்தில் நடைபெறுவதால் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ரயில்கள், விமானங்கள், பஸ்களில் முன்பதி செய்திருக்கும் பயணிகள் முன்கூட்டியே பயண நேரத்தை திட்டமிட வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள், அறிவுறுத்தல்கள் அனைவரும் முழுமையாக பின்பற்றி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அது தொடர்பாக 8122 223319 என்ற வாட்சப் எண்ணிலும், 77082 39100 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
Next Story

