பேராசிரியர் வீட்டில் நகை பணம் கார் திருட்டு

பேராசிரியர் வீட்டில் நகை பணம் கார் திருட்டு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் அருள் (55). நெல்லையில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா (50). அரசு பள்ளியில் ஆசிரியை. கடந்த 28ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு பிருந்தா பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை அவரது தயார் வீட்டில் சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டு கதவு மற்றும் கேட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகைகள், ரூபாய் 75 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டு வெளியே நின்ற காரையும் திருடி சென்றனர். இது குறித்து ஜோசப் அருள் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story