சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
செல்வகணபதி எம்பி அறிக்கை
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் டி.எம் செல்வகணபதி எம்.பி. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது:- சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எடப்பாடி அருகே நைனாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி உறுப்பினர் தேர்வு செய்தல், கலைஞர் நூலகம் அமைத்தல், கிளை, வார்டு பகுதிகளுக்கான புதிய இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்தல், பாக அமைப்பாளர்களுக்கான வலைத்தள பயிற்சிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. எனவே சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய பேரூர் பகுதி இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story