சேலம் சூரமங்கலம் முல்லை நகரில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை

X
சேலம் சூரமங்கலம் முல்லை நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வீட்டிலேயே மருந்து உபகரணங்கள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். பிரபாகரன் நேற்று முன்தினம் குடும்பத்துடன் அயோத்தியாபட்டணத்தில் வசித்து வரும் பெற்றோரை பார்ப்பதற்காக சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பிரபாகரனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பிரபாகரன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. இதில் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம், மடிக்கணினி ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது
Next Story

