சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

X
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 65-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை தாங்கினார். திரிவேணி எர்த்மூவர்ஸ் மற்றும் இன்ப்ரா நிறுவன இயக்குனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் 5 இடங்களைப் பெற்ற 60 மாணவ-மாணவிகள் உட்பட 681 பேருக்கு பட்டைய சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், இந்த கல்லூரியில் 65 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. இங்கு பயின்ற அனைவரும் தொழிற்கல்வியுடன், ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக வேண்டும் என்றார். கல்லூரியின் முதல்வர் கனகராஜ் பேசும்போது, இந்த கல்லூாியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல லட்சம் ஊதியத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் பட்டம் பெற்றவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

