தேசிய விளையாட்டு தினம் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி:

X
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ உ சி துறைமுகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு இந்த போட்டியை துறைமுக ஆணைய தலைவர் சுசந்த் குமார் புரோஹித் துவங்கி வைத்தார். பெண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் ஆண்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 70 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் கலந்து கொள்ள துறைமுகம் சார்பில் பள்ளிக்கு முறையான அழைப்புகள் வழங்காததால் குறைந்த மாணவர்களை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது போட்டியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் அதிகாலையிலே வந்ததனர் போட்டி 7;30 மணி அளவில் தொடங்கப்பட்டதால் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் மயக்கம் அடைந்தார் அவருக்கு உடனடியாக அங்கு நின்றவர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
Next Story

