ஓகனேக்கலில் குளிக்க ஆட்சியர் தடை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பொழியும் கனமழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக நேற்று இரவு நிலவரப்படி 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஆகஸ்ட் 31 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் அருவிகளில் குளிக்க மட்டும் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தடை விதித்துள்ளார்.
Next Story





