தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி வியாபாரம். கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.ஒருவர் கைது.

தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி வியாபாரம். கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.ஒருவர் கைது.
தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி வியாபாரம். கள்ள லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.ஒருவர் கைது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலைய பகுதியில் கள்ள லாட்டரி வியாபாரம் நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சனிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் லாலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ரயில்வே கேட் அருகே கள்ள லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த கள்ள லாட்டரி டிக்கெட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் லாலாபேட்டை காவல்துறையினர்.
Next Story