கருப்பூரில் சாலையை நடந்து கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
கருப்பூரில் சாலையை நடந்து கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே கருப்பூரைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் வயது 65. இவர் வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் உப்பிடமங்கலம் - சேங்கல் சாலையில் நடந்து அவரது வீட்டின் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று நம்மாழ்வார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து நம்மாழ்வார் மகன் சுரேஷ்குமார் அளித்த புகாரில் வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
Next Story




