கோவையில் பத்து லட்சம் ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்ட செல்வ கணபதி திருவீதி உலா !
விநாயகர் சதுர்த்தி விழா கோவை மாநகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநகரம் முழுவதும் 712 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ரத்தினபுரி சாஸ்திரி சாலை சசிகுமார் திடலில், இந்து முன்னணி 46-வது டிவிஷன் சார்பில் 33-வது ஆண்டாக அமைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி சிலைக்கு, பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உள்ள சலவை நோட்டுகள் கொண்டு மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற திருவீதி உலாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்தனர். இதற்காக ரூ.10 லட்சம் செலவில் பந்தல் அலங்காரம், ரூ.2.5 லட்சம் மதிப்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழா நிறைவாக, இன்று செல்வ விநாயகர் சிலை விசர்ஜனத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
Next Story



