கார் மோதியதில் முதியவர் பலி

X
மதுரை அருகே பூஞ்சுத்தியைச் சேர்ந்த சேசுராஜ் (75) என்பவர் கள்ளிக்குடி அருகே அகத்தாப்பட்டியில் உள்ள மகள் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் (ஆக.29) கள்ளிக்குடி ஓட்டலில் உணவு சாப்பிட்டபின், நான்கு வழி சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்
Next Story

