மதுரையில் "எழில் கூடல்" திட்டம் தொடக்கம்
மதுரையை தூய்மைமிக்க மாநகராக்கிட நேற்று (ஆக.30) இரவு சுமார் 2500 தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு தூய்மைப்பணியை மேற்கொள்ள "எழில் கூடல்" என்ற திட்டத்தின் கீழ் மீனாட்சியம்மன் கோவில் சுற்றுப் பகுதியில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை நகரில் மொத்தம் 64 இடங்களில் இத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. உடன் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மேயர், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story






