கோவையில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : பரபரப்பு!

கோவையில் இளம் பெண்ணை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குணியமுத்தூர் ரைஸ்மில் சாலையில் வசிக்கும் சுபாஷினி என்ற இளம்பெண், வீட்டின் அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றபோது, சேலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் அரிவாளால் தலையில் வெட்டியதாக தகவல். அக்கம்பக்கத்தினர் சுபாஷினியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தலையில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.முதற்கட்ட விசாரணையில், ஒருதலைக் காதல் காரணமாக தினேஷ் முன்பே சுபாஷினியை தாக்கியதுடன், அப்போது கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும், தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. தினேஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதால், அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story