விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் போட்டி
தூத்துக்குடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்தை தொழில் அதிபர் ஜயிரவம்பட்டி முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள் தூத்துக்குடியை அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் இந்திரா நகரில் உள்ள இந்திர சக்தி விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. சிறிய மாட்டு வண்டி மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன இந்த போட்டியில் தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 60 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. டேவிஸ் புரம் பகுதியில் இருந்து துவங்கிய இந்த மாட்டு வண்டி போட்டியை தொழிலதிபர் ஐயிரவன் பட்டி முருகேசன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றன. எட்டு கிலோமீட்டர் மற்றும் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன இந்த மாட்டு வண்டி போட்டிகளில் திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி, பொன் பாண்டி கோவில் நிர்வாகிகள் தங்கராஜ், ஆறுமுகசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாலைகளில் இருபுறங்களில் நின்று போட்டிகளை ரசித்தனர்
Next Story



