கோவை சாய்பாபா காலனியில் மர்ம நபர் அச்சம் – வீடியோ வைரல்!

X
கோவை சாய்பாபா காலனி, கே.கே. புதூர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மனநலம் பாதித்தவர் போல நடித்து, வீடுகள் மற்றும் வாகனங்களில் வைக்கப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடுவதாக கூறப்படுகிறது. ஒருவரிடம் செல்போன் திருட முயன்ற போது சிக்கிய அந்த நபர், “பாட்டு கேட்க எடுத்தேன்” என விளக்கி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story

