கோவை: பாபா ராம்தேவ் பிறந்த நாள் ஊர்வலம் உற்சாகம் !
கோவை டவுன் ஹால் இடையர் வீதியில் உள்ள பாபா ராம்தேவ் கோவிலில், அவரது பிறந்த நாளையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் இடையர் வீதி, தேர் முட்டி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நடனமாடினர். சிறப்பு விருந்தினராக திமுக செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து ஆடியது சிறப்பாக அமைந்தது. பாரம்பரியமாக ஜோதி ஏற்றி, அதில் தேங்காய் மற்றும் நெய் ஊற்றி முன்னேற்றப்பட்டு, பாபா ராம்தேவ் கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. பின்னர் சொகுசு கார்களில் விநாயகர், அனுமான், துர்கை உள்ளிட்ட சாமிகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டு பக்தர்களை கவர்ந்தது. ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்ததையடுத்து, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story




