கோவையில் காட்டு யானை அட்டகாசம் – முதியவர் படுகாயம் !

X
கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் நேற்று ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சாலையோரத்தில் நின்றிருந்த கார், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதுடன், கோவிலுக்குப் பூ பறிக்கச் சென்ற 90 வயது முதியவரை தாக்கியது. இதில் அவரது இரு கால்களும் முறிந்துள்ளன. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் தற்போது அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

