திருவட்டார் ஆதிகேசவபெருமாளுக்கு ஓணவில் தயாரிப்பு

X
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் ஓண வில் சமர்ப்பிப்பது வழக்கம். இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஓண நாளில் மாலை சுமார் 5 மணி அளவில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் செதுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத்துணியில் மூடி தென்மேற்கு மூலையில் வைப்பார்கள். ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மாலை தீபாராதனை நடைபெறுவதற்கு முன்பு அந்த வில்கள் சமர்பிக்கப்படும். ஓணவில் தயாரிப்பு சுமார் 4 அடி நீளம் அரை அடி அகலமுள்ள மரத்தில் செய்யப்படும் ஓணவில் தயாரிப்பதற்கான மரப்பலகைகளில் ஆதிகேசவப் பெருமாள், கிருஷ்ணன் உருவங்கள் வரையும் வேலையை நேற்று தச்சர் துவங்கினார். ஓவியங்கள் வரையப்பட்டு வார்னீஷ் பூசப்பட்டு நான்கு நாட்களில் பணி முடிந்து 13 ஓணவில்கள் கோவிலில் சமர்பிக்கப்படும் என தச்சர் சுரேஷ் குமார் கூறினார்.
Next Story

