கோவையில் நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு – போலீசில் புகார் !

X
கோவை துடியலூர் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஞ்சித், தனது உரையில் நடிகர் விஜயை குறித்துப் பேசினார். அப்போது, “விஜயின் முகத்தில் குத்த வேண்டும் போல தோன்றுகிறது” என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூற்று வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தினர் ஆன்லைன் வழியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகர் ரஞ்சித்தின் உரைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

