கரூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மாணவ மாணவிகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
கரூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மாணவ மாணவிகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அட்லஸ் கலையரங்கில் கரூர் விங்ஸ் லார்ட்ஸ் மற்றும் தமிழ் வாரியர்ஸ் கலை விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய 4-வது தெற்கு இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு வயது பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற இருபால் மாணாக்கர்கள் வெற்றி பெறும் முறை போடு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story





