கரூர்-தமிழ் திரைப்பட நடிகர் விஷால் பிறந்தநாள் கொண்டாட்டம்.
கரூர்-தமிழ் திரைப்பட நடிகர் விஷால் பிறந்தநாள் கொண்டாட்டம். தமிழ் திரைப்பட முன்னணி நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் 48வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் விஷால் நீண்ட ஆயுளை பெறவும் திரைத்துறையில் மீண்டும் அவர் தொடர்ந்து ஜொலிக்கவும் கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல இயக்கத்தின் பொருளாளர் ராஜ்குமார் செயலாளர் குணா பொருளாளர் மனோஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ் மகளிர் அணியை சேர்ந்த விஜயா கீதா ரேணுகா தமிழரசி நர்மதா கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.மேலும் தங்கள் அபிமான நடிகரான விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story






