முத்தூர் சோளீஸ்வரர் கோவில் திருக்கல்யாணம்

X
முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனமர் சோழீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. முன்னதாக நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும், பொருளாதார நிலை மேம்படவும், மக்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்திடவும், திருமண தடை நீங்கவும், மாணவர்களுக்கு கல்வி வளம் மேம்படவும், தம்பதிகளின் வாழ்வில் நல்ல இல்லறம் அமைந்திடவும் சிவன் - பார்வதி தேவியின் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

