புதுப்பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்ட பேருந்து நிறுத்தம்

X
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தத்தில் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 31) அழகான பசுமையான ஓவியங்கள் வரைந்து பேருந்து நிறுத்தத்தை புதுப்பொலிவாக மாற்றியது.
Next Story

