பாஜக மற்றும் அமித்ஷாவின் அழுத்தத்திற்காகவே இருவரும் கைகோர்த்துள்ளதாக்க விருதுநகர் எம்பி பேட்டி

X
அண்ணாமலை- எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்களை நடிப்பாக தான் ஏற்றுக்கொள்ள முடியும், பாஜக மற்றும் அமித்ஷாவின் அழுத்தத்திற்காகவே இருவரும் கைகோர்த்துள்ளதாக்க விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிவகாசியில் பேட்டி! சிவகாசியில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2026 -ம் ஆண்டு நடைபெற வுள்ளசட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றி கழகத்தில் தாக்கம் அதிகமாக இருக்குமென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக டிடிவி தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு? அரசியல் கருத்து அவருக்கு கைவந்த கலை. டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலி ருப்பதாக கூறிவரும் நிலையில் அவர் கட்சியை விட பலமான இன்னுமொரு கட்சி ( எடப்பாடி தலைமையிலான அதிமுக )யிருப்பதாக பாஜகவினரே கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் தலைமையிலான கூட்டணியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அமித்ஷா அதிமுக ஆர் எஸ் எஸ் -ன் அங்கமாகவே உள்ளது. தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் கட்சியாக இருந்து வரும் அமித்ஷா தலைமையிலான அதிமுக இந்த முறையும் மக்களால் நிராகரிக்கப்படும் என்பதைத்தான் டிடிவி வேறு விதமாக கூறியுள்ளார். இன்றைக்கு சகோதரர்கள் எனக் கூறிக் கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் ஒரு ஒருவர் எப்படி தாக்கி பேசிக் கொண்டனர். அண்ணாமலை வாய்க்கு வந்தபடியெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றி பேசினார். தற்போது அவர்கள் இருவரும் நடிக்கின்ற நடிப்பைப் பார்க்கும் போது கவுண்டமணி- சத்யராஜ் பேசும் "என்ன நடிப்புடா இது" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது. அண்ணாமலை- எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்களை நடிப்பாக தான் ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக மற்றும் அமித்ஷாவின் அழுத்தத்திற்காகவே இருவரும் கைகோர்த்துள்ளனர். பாஜகவையும் அதிமுகவையும் வழி நடத்தும் தலைவராக மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளார். ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் திருவில்லிபுத்தூரிலிருந்து திருப்பதி வரை சென்று வரும் விதமாக புதிய ரயில் விட மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவதுடன், பாராளுமன்றத்தில் இருந்து குரல் கொடுப்போம். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிறைய சுற்றுப்பயணம் சென்றுள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட யார் வெளிநாடு போனாலும் அது அவருக்கு சுற்றுலாவாக தான் தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் நரேந்திர மோடியும் அரசு பயணமாக தான் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் பிரதமர் கையில் சிபிஐ உள்ள பயம் உள்ளதால் அன்புமணி பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளதை விமர்சிக்க மாட்டார். முதல்வர் ஸ்டாலின் கையில் சிபிஐ இல்லாததால் அவரின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து விமர்சிக்கிறார். பிரதமரோ தமிழக முதல்வரோ யாரும் ஊர் சுற்றப் போகவில்லை. எனவே அன்புமணி இது போன்ற கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பாஜக தேமுதிகவை கூட்டணிக்கு அழைக்க உரிமை உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளையும் பாஜகவினர் இன்றைய தினம் கூட்டணிக்கு அழைக்கின்றனர். ஓபிஎஸ், தினகரன் தவிர பாஜகவை நம்பி சென்றவர்களின் கதி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். பாஜகவை நம்பி சென்றவர்களையும் செல்பவர்களையும் கழுத்தறுப்பது தான் அவர்களின் வழக்கம். தேமுதிகவை பா.ஜ.கவினர் எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொண்டனர் என்பது வரலாற்றில் பலருக்கும் தெரிந்த பல விஷயங்கள். 2014 -தேர்தல் போன்ற தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேமுதிகவை பாஜகவினர் எப்படி நடத்தினார்கள் என்பது தெரியும். பாஜக மற்ற அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உண்மையான அன்பையும், ஆதரவையோ எந்தக் கட்சிக்கும் பாஜகவினர் வழங்க மாட்டார்கள். பிரதமர் தமிழக முதல்வர் ஆகியோரின் வெளிநாடு சுற்றுப்பயணம் என்பது வெவ்வேறு பிரச்சனை குறித்த பயணமாகும். பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லை ப் பிரச்சனை டிக்- டாக் தடையில் 40 செயலிகளை முடக்கம் செய்ததற்கு பின்பாக தற்போது சைனா சென்றுள்ளார். ரஷ்யா மற்றும் சைனா நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவுக்காக எந்த பிரதமர் நல்லது செய்தாலும் நாங்கள் அவர்களுட னிருப்போம். இந்திய பிரதமர் என்பவர் இந்தியாவை தான் முதன்மை படுத்த வேண்டும். தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு அல்லது அரசியலை முன்னிலைப்படுத்துவதோ நியாயம் கிடையாது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளி நாட்டு முதலீடு சுற்றுப்பயணம் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருந்த போதும் அவரது வெளிநாட்டு முதலீடு சுற்றுப்பயணத்தை வரவேற்றோம். தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் யார் மூலமாக நல்லது நடந்தாலும் அதனை வாழ்த்தி வரவேற்போம். என்றார்...
Next Story

