தனியார் நர்சிங் கல்லூரியில் முதன் முறையாக ஓணம் கொண்டாட்டம் களை கட்டியது.

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கேரள மாணவிகள் அதிகமாக பயிலும் தனியார் நர்சிங் கல்லூரியில் முதன் முறையாக ஓணம் கொண்டாட்டம் களை கட்டியது. 150 க்கும் மேற்பட்ட மலையாளி மாணவிகளுடன் தமிழ் மாணவிகளும் இணைந்து பாரம்பரிய உடைய அணிந்து திருவாதிரா நடனமாடி, அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி சக்கரவர்த்தி உருவ படத்தின் முன்னதாக முழக்கமிட்டு கொண்டாடினர். உரியடி போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டை மலையில் செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களில் 150 க்கும் மேற்பட்டோர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாணவிகள். இந்த கல்லூரியில் முதல் முறையாக ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கலந்து கொண்டவர்களில் பலர் கேரள பாரம்பரிய உடை அணிந்து, மகாபலி சக்கரவர்த்தி உருவப்படத்திற்கு முன் ஓணம் வாழ்த்துக்களை முழக்கமிட்டு, பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டு, கேரள பாரம்பரிய திருவாதிரா பாடலுக்கும் மலையாள பாடல்களுக்கும் நடனமாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து உறி அடித்தும், மியூசிக்கல் சேர், கரண்டியில் எலுமிச்சம் பழத்தை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
Next Story

