முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தனர்.

X
Komarapalayam King 24x7 |31 Aug 2025 8:10 PM ISTகுமாரபாளையம் முனிராஜா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தனர்.
குமாரபாளையம் முனிராஜா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தனர். முனிராஜா மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஸ்ரீதீகஷா மாவட்ட அளவிலான முதலமைச்சர் சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடமும், கையுந்து போட்டியில் மாவட்ட அளவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சஞ்சனா. ஜனிகாஸ்ரீ, ஏழாம் வகுப்பு படிக்கும் தனுஷியா.இரண்டாமிடமும், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வெங்கடேசுவரன். பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரிணி. இரண்டு மற்றும் மூன்றாமிடமும் பெற்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவிலான மட்டைப்பந்தில் மேல்நிலை vsஆண்டு பயிலும் பவித்ர பிரித்தி, கனிஷ்கா, சாதனா, ,சமிக்ஷா, மூன்றாமிடமும், மாவட்ட அளவிலான உயரம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகேந்திர பிரசாத் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். மேற்கண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாடத் தேர்வாகி உள்ளனர்.இம்மாணவர்களை உருவாக்க பாடுபட்ட பள்ளியின் உடற்கல்வி பயிற்றுனர்கள் மணி, திவகல்யா, பள்ளியின் முதல்வர் அர்ச்சனா பன்னீர் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜே.கே. கே. முனிராஜா கல்விக்குழுமங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா , தாளாளர் ஜெயப்பிரகாஷ், இயக்குனர்கள் ஸ்ரீநித்யா மற்றும் கரண்ராஜா வாழ்த்து கூறினார்கள்.
Next Story
