வயது மகனுடன் தாய் மாயம்

வயது மகனுடன் தாய் மாயம்
X
குமாரபாளையத்தில் 5 வயது மகனுடன் தாய் மாயமானார்.
. குமாரபாளையம் வட்டமலை, ஜோதி நகரில் வசிப்பவர் கதிர்வேல், 28. சரக்கு வாகன ஓட்டுனர். இவரது மனைவி ரம்யா, 24. இவர்களுக்கு 5 வயதில் யோக மித்ரன் என்ற மகன் உள்ளான். ஆக. 23ல் வேலைக்கு போகும் போது. மனைவி, மகன் வீட்டில் இருந்தனர். வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த போது மனைவி, மகன் இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் கதிர்வேல் புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் காணாமல் போன ரம்யா மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.
Next Story