பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும் மனதின் குரல் நிகழ்ச்சி..

X
Rasipuram King 24x7 |31 Aug 2025 9:12 PM ISTபிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும் மனதின் குரல் நிகழ்ச்சி..
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டில் உள்ள மகளிர், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரை பெரிதும் ஊக்கப்படுத்தி வருகிறார் என்றும் மத்திய பாஜக அரசின் தீர்க்கமான கொள்கை முடிவுகளால், வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும் என்றும், நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் பேட்டியின்போது கூறினார்.. பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனம் திறந்து பேசும் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று (31.08.2025) ஒலிபரப்பானது. 125-வது மனதில் குரல் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் Ex. MP., கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மனிதன் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல், கேலோ இந்தியா திட்டத்தின் பயன்கள், எல்லா நேரங்களிலும் உள்ளூர் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும், சூரிய சக்தி திட்டம், உலக அளவில் எதிரொலிக்கும் பாரதத்தின் கலாச்சாரம் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே கலந்துரையாடியதை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட பிறகு இராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். K.P. இராமலிங்கம், பாரத பிரதமர் நரேந்திர மோடி மனதில் குரல் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி அதே நேரத்தில், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, காஷ்மீர் எவ்வளவு அமைதியான சூழ்நிலையில் உள்ளது என்பதை கேலோ இந்தியா விளையாட்டு நடைபெற்ற வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை பேட்டி கண்டு பாராட்டினார். இதனை தேச மக்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். 2047-ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக, தேசத்தை வலிமை உடன் தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இளைஞர்களை மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக ஊக்கப்படுத்தி, அதில் வெற்றி கண்டு வருகிறார். தொடர்ந்து அவரை பின்பற்றி வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தயாராகி விட்டார்கள் என்பதை காட்டுகிறது. இந்தியாவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகள் கொண்டு வருவதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளார். ஆனால், தமிழ்நாடு முதல்வர், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு பயணம் செல்வதற்கு முன்பாக, வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவது குறித்து பேசாமல், புதிய கூட்டணி கட்சி வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்கள், தங்களை நோக்கி வருவதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுவாழ் அணி மூலம் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற வாக்காளர்களை சேர்ப்பதற்கு செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தவறான வாக்காளர் பட்டியலை தயாரித்த முயற்சி செய்கிறார். இதுபோன்ற தவறுகளை திருத்துவதற்கான கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்தி தொடர்பான பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், இராசிபுரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொண்டால், அந்த பொறுப்பில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ஆம்புலன்சில் செல்லுங்கள் என கூறுவது வாடிக்கையாக உள்ளது. 108 அவசர ஆம்புலன்ஸ் பொறுப்பாளர்கள் தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அப்போது, பல இலட்சக்கணக்கான ரூபாய் கமிஷனாக கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் ஊழல் பரவி உள்ளது போல, மருத்துவத் துறையிலும் ஊழல் மலிந்து விட்டது என்பதையே காட்டுகிறது. இராசிபுரத்தில் இதுபோன்று நடந்த குறித்து புகார் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில்லை. மாநில அரசின் காப்பீடு திட்டத்திற்கு மட்டுமே ஊக்கமளிக்கிறார்கள். அதிலும் ஊழல் நடக்கிறது. இந்த தவறுகள் களையப்பட வேண்டும். எனவே அந்தந்த மாவட்டத்திலுள்ள ஆட்சியர்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று கூறியுள்ளாre என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கே.பி. இராமலிங்கம், மத்திய பாஜக அரசு, வலிமையான பாரதம், வேளாண்மை, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, விளையாடு இந்தியா, சுயசார்பு இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களினால் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுத்து, செயல்பட்டு வருகிறது. ஆனால் விஜய் என்ன கொள்கை வைத்துள்ளார்? என்பதை விளக்க வேண்டும், தொடர்ந்து தமிழக அரசியலில் பயணித்து வருகிறேன் என்ற முறையில் கேட்கிறேன். தவெக என்ன கொள்கையை கொண்டு செயல்படுகிறது என கூற வேண்டும். பிற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், அதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை திமுக எம்பி கனிமொழி நன்கு அறிந்தவர்தான். ஆனால் அவரது அண்ணனிடம் அதிக பாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, அதுகுறித்து பொதுவெளியில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் ஏற்கனவே வெளிநாடு முதலீடு ஈர்ப்பதற்காக பயணம் செய்து, அதற்காக எவ்வளவு முதலீடு கிடைத்தது என்பதை தெளிவாக புள்ளி விவரங்களோடு வெளியிட வேண்டும். வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கும் மத்திய அரசின் வர்த்தக நடைமுறைதான் காரணம். அதற்கான வழிவகைகளை மத்திய அரசு செய்து தந்துள்ளதால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வருகின்றன. ஆனால் இன்னும் பல நிறுவனங்களின் முதலீட்டை தமிழக முதல்வர் பெறுவதற்கு தவறிவிட்டார். எனவே தற்போது அவர் என்ன முதலீடு ஈர்க்க உள்ளார் என்பதை விளக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டனவே என கேட்ட பட்ட கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம், ஏற்கனவே ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மு.க. ஸ்டாலின், மனுக்களை பெட்டியில் போடச் சொல்லி பெற்றுக் கொண்டு, இதுவரை அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. முதல்வர் வெறும் மத்தாப்பு அரசியல் செய்கிறார். பல்வேறு விலைவாசிகள் உயர்ந்துள்ளதால் திமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. திமுக அரசின் ஊழல்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எம்ஜிஆர், அண்ணா போன்ற பொதுவான தலைவர்களின் புகைப்படங்களை வைத்து யார் அரசியலில் ஈடுபட்டாலும் அதை நான் வரவேற்கின்றேன். ஏனென்றால் அந்த தலைவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இன்று, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளில் உள்ளனர். எம்ஜிஆரின் ஆளுமையில்தான் திமுக நடத்தப்படுகிறது. எம்ஜிஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் மட்டுமே பல கட்சியினருக்கு வாக்குகள் வந்துவிடும் என எதிர்பார்க்க கூடாது என்றும் இராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் பாஜக நிர்வாகிகள், கிளை தலைவர் ராஜா,நகர தலைவர் வேலு , வள்ளி ராஜா, மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story
