கிட்னி கொடுத்த பெண்களுக்கு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்..

X
Rasipuram King 24x7 |31 Aug 2025 9:46 PM ISTகிட்னி கொடுத்த பெண்களுக்கு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்..
இராசிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நாமக்கல் மாவட்ட ஒன்பதாவது மாநாடு மைதிலி சிவராமன் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.ராணி மாவட்டத் துணைத் தலைவர் ஜி. பழனியம்மாள் இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராணி பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர் மூத்த தலைவர் அத்தாயம்மாள் கொடியேற்றி வைத்தார். மோகனப்பிரியா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.நகரச் செயலாளர் பி.ஜீவா வரவேற்புரையாற்றினார் மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் உஷா பாசி சிறப்புரையாற்றினார் மாவட்ட துணைச் செயலாளர் எம். செல்வராணி வேலை அறிக்கையை முன் வைத்தார் மாவட்ட பொருளாளர் கே. புஷ்பலதா வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். மத்திய குழு உறுப்பினர் ஆர். சசிகலா நிறைவுறையாற்றினார் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட தலைவராக பி.ராணி மாவட்ட செயலாளராக எம். செல்வராணி மாவட்ட பொருளாளராக கவிதா பாலகிருஷ்ணன் மாவட்டத் துணைத் தலைவராக ராணி பூபதி மாவட்ட துணைச் செயலாளர் வி.பிரியா மாவட்ட குழு உறுப்பினர்களாக லட்சுமி,கோமதி, மோகனப்பிரியா, சுதா,சாந்தி,கவிதா உள்ளிட்டவர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குமாரபாளையம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலும் மாவட்ட முழுவதும் பரவலாகவும் குடும்ப வறுமை,கடன் தொல்லைகள் காரணமாக பெண்கள் தங்களது சிறுநீரகத்தை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அவ்வாறு சிறுநீரகத்தை விற்ற பெண்கள் பல்வேறு இணை நோய்களுக்கு ஆளாகி உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு வசதியற்றவர்களாக அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் குமாரபாளையம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளிலும் நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அவர்களுக்கான சிறப்பு மருத்துவரை நியமித்து சிறப்பு சிகிச்சை பிரிவை உருவாக்கி தட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைத்திடவும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கிடவும் அவர்களின் வீடெற்ற பெண்களுக்கு இலவச வீடு அரசு வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். பெண்கள் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுவதை தடுத்திட தமிழக அரசு பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வேலை வழங்க வேண்டும். வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் சம்பவத்துக்கு காரணமானவர்களை கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது புகார் அளிக்க வரும் பெண்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வடுகப்பட்டி தொட்டியபட்டி ஆர். புதுப்பாளையம் ஆர். பட்டணம் பகுதியில் வசிக்கும் வீட்டு நிலமற்ற ஏழை மக்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனை வழங்கிட கேட்டும் அணைப்பாளையம் ஏரி புறம்போக்கில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கிட வலியுறுத்தி அக்டோபர் 25 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். ஆர்.புதுப்பாளையம் மயானத்தில் குப்பை கழிவுகளை கொட்டி மாசு படுத்துவதை கண்டித்தும் சுகாதாரமாக பராமரிக்க வலியுறுத்தியும் 2025 செப்டம்பர் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் பாடை சுமக்கும் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
Next Story
