இராசிபுரம் : சேலம்

X
Rasipuram King 24x7 |31 Aug 2025 10:00 PM ISTஇராசிபுரம் : சேலம்
சேலம் & நாமக்கல் மாவட்ட குலாலர் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளை, குலாலர் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, தமிழ்நாடு குலாலர் திருமண தகவல் மையம் மணமாலை பதிவு செய்தல் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலம், நாமக்கல் மாவட்ட குலாலர் சமுதாய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் நிரந்தர நிறுவனத் தலைவர் ஆர். மகாலிங்கம் அவர்கள் நினைவாக எம். கண்ணன், கற்பகம், திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். குலாலர் சங்க மாநில துணைத் தலைவர், அறங்காவலர் எம். தனபால் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மதுரை மாவட்ட ஐகோர்ட் வக்கீல் பானுமதி, செயலாளர் பி. மனோகரன், பொருளாளர் ஏபிடி தியாகராஜன் ஆகியோர் 300 மாணவ மாணவிகளுக்கு 4 லட்சம் கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி ரூபாய் 20,000, மூன்று வெட் கிரைண்டர், 2 தையல் இயந்திரம் வழங்கினர். விழாவில் சேலம் & நாமக்கல் மாவட்ட குலாலர் சமுதாய பிரமுகர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சீனிவாசன், நன்றியுரை கூறினார்.
Next Story
