ஆலங்குளத்தில் வீட்டிற்கும் புகுந்த மரநாய் உயிருடன் மீட்பு

ஆலங்குளத்தில் வீட்டிற்கும் புகுந்த மரநாய் உயிருடன் மீட்பு
X
வீட்டிற்கும் புகுந்த மரநாய் உயிருடன் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சார்ந்த ரஞ்சித் என்பவர் வீட்டில் பழங்கால குதிரில் இரண்டு மரநாய் புகுந்தது. இதை கண்ட ரஞ்சித் உடனே ஆலங்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புதுறை நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சாகுல் ஹமீது திருமலை குமார், ரமேஷ், ஆனந்தகுமார், விவேக்பைலட், கார்த்திக் கொண்ட குழுவினர் வீட்டில் பதுங்கி இருந்த மரநாய் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Next Story