காளி தேவி, அனுமன் தத்ரூப காட்சிகள் கவர்ந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலம் !

விநாயகர் சிலைகள் நேற்று மாலை இறுதி கட்டமாக முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை இறுதி கட்டமாக முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சிலைகள் பூ மார்க்கெட், இடையர் வீதி, காந்தி பார்க், தடாகம் சாலை வழியாக ஊர்வலமாக சென்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு விநாயகர் சிலைகளை தரிசனம் செய்தனர். இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்த ஊர்வலத்தில் காளி தேவி அரக்கர்களை வதம் செய்வது, அனுமன் வானர சேனைகளுடன் தோன்றுவது போன்ற தத்ரூப காட்சிகள் பொதுமக்களை கவர்ந்தன. ஊர்வல பாதைகள் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிப்படை, மத்திய அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்தண்ணன் குளம் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது
Next Story