லாரியை முந்துவதற்காக சென்ற அரசு பேருந்தால் பரபரப்பு

X
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும் வென்றான் பகுதியில் நேற்று இரவு தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் இருந்து கரூருக்கு லாரி ஒன்று சுண்ணாம்பு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பின்னால் தூத்துக்குடி இருந்து கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது . வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை உரசிபடி முந்தி சென்றுள்ளது. இதனால் நிலைகுலைந்து போன லாரி கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டது. லாரி டிரைவர் திறம்பட செயல்பட்டு லாரி இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அது வேகமாக சென்ற அரசு பேருந்தை மற்ற லாரி டிரைவர்களின் உதவியோடு மடக்கி, லாரி மீது உரசிது குறித்து கேட்டபோது இருதரப்பு கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர் அதிவேகமாக சென்றது பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

