ஊர்வலம் இளைஞர்கள் மோதல்

ஊர்வலம் இளைஞர்கள் மோதல்
X
மோதல்
சங்கராபுரத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. விநாயகர் சதுார்த்தி முன்னிட்டு சங்கராபுரத்தில் 11 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவில் அருகிலிருந்து புறப்பட்டு, அம்மன் கோவில் தெரு, மீனவர் தெரு, வடக்கு தெரு, ஆற்றுப்பாதை தெரு வழியாக சென்ற ஊர்வலம் தியாகராஜபுரம் சாலையோர ஏரியில் விஜர்சனம் செய்யப் பட்டது. ஏடி.எஸ்.பி., திருமால் தலைமையில், டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் தடியடி விநாயகர் சிலை ஊர்வலம் சங்கராபுரம் பூட்டை ரோடு வழியாக அரசு மருத்துவமனை எதிரே அருகே சென்றபோது, விநாயகர் சிலை ஏற்றி வந்த ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதனால் அங்கு ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இளைஞர்களை சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story